Friday, 30 December 2016
Tuesday, 29 November 2016
Wednesday, 16 November 2016
Trainee Coders Invited
Omega Healthcare has extensive experience in providing services in a variety of hospital-based and office-based physician specialties. We also have experience in providing services to A/R Management companies and their hospital clients for their credit balance account, regular accounts receivable and facility coding needs. Our delivery organization is driven by quality and Six Sigma methodologies, which ensure improved processes and client satisfaction.
Post: Trainee Coders
Job Description:
•Understand the client requirements and specifications of the project and Code the charts accordingly.
•Meet the productivity targets of clients within the stipulated time.
•Ensure that the deliverables to the client adhere to the quality standards. Prepare and Maintain status reports.
•Understand the client requirements and specifications of the project and Code the charts accordingly.
•Meet the productivity targets of clients within the stipulated time.
•Ensure that the deliverables to the client adhere to the quality standards. Prepare and Maintain status reports.
Desired Profile:
•Graduates / Post-Graduates in Life Science – Pharmacy, Physiotherapy, Zoology, Microbiology, BAMS, BHMS, BUMS
•0 to 2 years of relevant experience
•Good knowledge of human anatomy and physiology
•Training in medical coding will be an added advantage
•Basic keyboard skills with effective communication skills
•Graduates / Post-Graduates in Life Science – Pharmacy, Physiotherapy, Zoology, Microbiology, BAMS, BHMS, BUMS
•0 to 2 years of relevant experience
•Good knowledge of human anatomy and physiology
•Training in medical coding will be an added advantage
•Basic keyboard skills with effective communication skills
Additional Information:
Experience:0-2 years
Location: Karnataka, Bangalore
Education: B.Pharm, M.Pharm, B.Sc, M.Sc - Bio-Chemistry, Biology, Botany, Chemistry, Microbiology, Nursing, Zoology, BHMS, BAMS, BUMS
Industry Type: Pharma/ Healthcare/ Clinical research
Functional Area: IT
Experience:0-2 years
Location: Karnataka, Bangalore
Education: B.Pharm, M.Pharm, B.Sc, M.Sc - Bio-Chemistry, Biology, Botany, Chemistry, Microbiology, Nursing, Zoology, BHMS, BAMS, BUMS
Industry Type: Pharma/ Healthcare/ Clinical research
Functional Area: IT
For Apply/ send your resume, careers@omegahms.com
Ministry of Defence : Applicants are invited for the post of Pharmacists
Allahabad Cantonment Board is an autonomous body under the aegis of Ministry of Defence, Govt. of India. Allahabad Cantonment is a Category II Cantonment. The Board consists of 14 Members including 7 elected members. The Station Commander is ex-officio President of the Board. The Vice President is elected out of 7 elected members of the Board. The Chief Executive Officer is from the cadre of Indian Defence Estates Services, under the Ministry of Defence, Govt. of India and he acts as the Secretary of the Board.
Minimum Qualification : Diploma in Pharmacy and registered in state pharmacy council.
Amount of Honorarium per Month : 10,000/-
Working hours (timings mutually available) : 6 days a week 8 hours each day
Applicants are invited for the post of Pharmacists having the requisite qualification as shown below. The posts are temporary and purely contractual in nature for a period of one year. The candidates must appear in the skill test/performance test with an application addressed to the Chief Executive Officer, Cantonment Board, 2 Ashoka Road, Allahabad alongwith all copies of relevant documents, attested copies of certificate.
The skill test/performance test will be held in Cantt. Board office 2, Ashoka Road, New Cantt., Allahabad on 19-11-2016 at 11:00 A.M. The selected candidates will provide consultancy services at Cantt. General Hospital near Sadar Bazar, New Cantt., Allahabad and dispensaries as per working hours.
Attention Pharmacist..!
1.No pharmacist can attempt civil service because no sub in civil service.
2.Pharmacist never practice or prescribe medicine.
3.Pharmacist attempt FDA exam but not selected after exam because our pharmacy subject not acceptale for it..!
4.Pharmacist don't open medical shop without licence and doctor or other person can open hospital.
5.Pharmacist can not easily enter in pharma industry but other easily.
6.Government rule are in hosp there is 50 nurse for 300 bed in hospital for that they have got 35000,but in opposite there is 10 pharmacist for 300 bed and salary ............... only.
Please read it carefully we all know pharmacist have no scope.
But its wrong thoughts because we have no proper info about it or We have no unity or majority.
But its wrong thoughts because we have no proper info about it or We have no unity or majority.
So we are request u all that please come with us..!
We can change this...We go to PCI ask them why these are not included in civil services ,FDA exam...!
Monday, 14 November 2016
சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி
1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் நொடியில் மறைந்தது.நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.
Drug counselling centre
மருந்து கடைகளில் Drug counselling centre அமைத்துக்கொள்ளலாம் அதற்கான கட்டணத்தை பயனரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் . இது தான் நமது சிறிதளவான அங்கீகாரம் . இதை சரியான விதத்தில் பலப்படுத்தும் போது தான் நமது சமூக அங்கீகாரம் சாத்தியப்படும். இதற்கு பெரும் காரணமான Dr.Suresh அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். அடுத்த வரும் ஆண்டுகள் மிகப்பெரிய மாற்றத்தினை உருவாக்கும் . இனிய எதிர்காலம் நமக்கானது. வாழ்த்துக்கள்.
Thanks :Mrs.Thamizh venkatraman
Saturday, 12 November 2016
interesting facts about pharmacy
Coca-Cola was invented by a pharmacist named John Pemberton. He carried the jug of the new product down the street to Jacob's Pharmacy where it was sampled and pronounced "excellent" and placed on sale for 5 cents a glass as a soda fountain drink.Coca Cola was originally a cough syrup made by a Pharmasist in the 1800s.
Pepsi was also invented by a pharmacist, as was Vernor’s Ginger Ale by Detroit pharmacist James Vernor.
Pepsi was also invented by a pharmacist, as was Vernor’s Ginger Ale by Detroit pharmacist James Vernor.
illegal stocking and sale of medicines
As the border villages in the capital district of Kerala have become havens for illegal stocking and sale of medicines, the drugs control department has tightened enforcement activities throughout these villages bordering Tamil Nadu.
As part of the operation to bust illegal sale of medicines required for both humans and animals, the assistant drugs control office at Nadumangadu in Thiruvananthapuram district, following a tip off, raided a private hospital pharmacy and seized huge quantities of various categories of medicines stocked there. All the medicines were stocked in an unsafe condition, office sources said. According to the ADC, P.K Sreekumar, St.Vincent Mission Hospital functioning at Chullimanoor run by a Tamil Nadu native homoeo doctor has been treating patients in allopathic system with separate pharmacy for allopathic medicines. He said the hospital pharmacy had no licence and no pharmacist was working there. Since the doctor is a homeopath, he is not authorised to keep allopathic drugs at his clinic, hence cases under section, 18 C and 18 A (6) were taken against the doctor and the pharmacy. The seized drugs were produced before the Judicial First Class Magistrate Court at Nedumangad. The pharmacy at the hospital was selling medicines to all those who wanted drugs without prescription of a registered medical practitioner. The investigators could not find any purchase records of the medicines. According to the enforcement officials, the department is enquiring the source of the medicines. With no registered pharmacist to dispense the medicines, the officials said the hospital was violating many provisions of the D&C Act and Rules. “On the ground that the medicines were stocked in an unauthorised location without valid drug licence, a case of violation of Section 18(c) of the Drugs and Cosmetics Act, 1940 was taken against the accused homoeopath, Sathyaraj. Further, case of violation of 18 A(6) was registered since the accused was found as quack and the drugs were sold without valid prescription. No purchase records were kept at the pharmacy. Medicines worth Rs.50,000 were seized from the pharmacy and it was sealed”, said Sreekumar. In addition to the ADC, the raided team included drugs inspectors Santhosh K. Mathew, V. Vinod, Aji. S and V.N. Smitha. |
Friday, 11 November 2016
The Hitler
ஹிட்லரின் வரலாறு
************************************
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.
அலோய்ஸ் கண்டிப்பான தந்தை. தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிஊர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது.
ஹிட்லர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.
குடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார். ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். “அடால்ப்,” என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம். அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்.
1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார்.
தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.
இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.
மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.
பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவே தாயை பிரிந்தார். ஆனால் அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார்.
அடுத்த வருடமும் ஓவியப் பள்ளியில் சேர முயற்சி செய்தார். ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.
அவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது.
ஹிட்லர் அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடைதார்,
இக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார். தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான் தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார். இது வரையிலும் அவருக்கு இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்.
பணம் கரைந்தது. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார். வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அப்போதுதான். ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.
1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார். அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.
முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான். அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது.
ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!" என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.
மருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த 'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான். அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே 'நாஜி'. இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது. மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது.
1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.
அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.
1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான்.
சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். இது உலகப் புகழ் பெற்ற நூல். 'இனம்' என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.
அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி. ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது.
அந்த சமயம் பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். கம்யூனிஸ்ட்களே இதற்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார்.
அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார்.
ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.
ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.
ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.
1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.
மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். "அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.
சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா..!
"விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!" என்று எச்சரித்தார் ஹிட்லர்.
வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.
1035 பக்கங்கள் கொண்ட 'அடால்ப் ஹிட்லர்' என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், "ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை "ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.
முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது. இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.
ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.
ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.
முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.
"சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.
தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.
பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.
பெண்களுக்கு ராணுவத்தில் பலப் பணிகளில் இடம் தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார். பெண்களை எப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லை ஹிட்லர். இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராக திகழ்ந்தார். குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார் ஹிட்லர்.
பல எதிரி நாடுகளை, கத்தியும் இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்கு புத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும் பெரிதும் உதவி செய்தன.
ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.
ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார்.
Monday, 31 October 2016
Friday, 28 October 2016
Wanted
Educational Qualification: Any Degree Skills
• Good communication and Interpersonal skills
• Honest and Trustworthy
• Adaptability & Planning skills
• Smart worker
• Flexibility
• Teamwork
Salary: As per the company norms.
Email Id: sanakkiyan007@gmail.com
Contact No: 97897 75758
Address:
Turining Point Youth Welfare Foundation,
148,Rajaram Nagar,Tamil Sangam Road,
Anna Park Backside Road,Salem-636007
Tuesday, 25 October 2016
The Donkey
விடாமுயற்சி
=============
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
=============
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?
எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
Monday, 24 October 2016
Energy Tonic
நம் வாழ்வில் நாம் உயர்வடைய, உன்னதமான இடத்தைப் பிடிக்க, இலக்கு அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒன்றையும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் அடுத்த கட்ட முயற்சியும்தான் நம்மை மேம்படுத்தும்.இரண்டு நண்பர்கள் ஏரிக்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
அந்த ஏரியில் மீன்கள் துள்ளும் அழகை ரசித்தபடி கடந்தார்கள். ‘‘ஏரியில் மீன்களைப் பார்த்தாயா?’’ என்று ஒருவன் கேட்டான்.‘‘ஆமாம்’’ என்றான் இன்னொருவன். உரையாடல் தொடர்ந்தது.‘‘அவை மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றன.’’
‘‘நீயென்ன அந்த மீனா?’’‘‘இல்லை.’’
‘‘அப்படியென்றால் அவை சந்தோஷமாக இருக்கின்றன என உனக்கு எப்படித் தெரியும்?’’ என்று மடக்கினான் ஒருவன்.‘‘நீ நீதானே. நான் இல்லையே’’ என்று பதிலுக்குக் கேட்டான் இன்னொருவன்.
‘‘ம்...’’‘‘அப்படியெனில் மீன்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன என நான் உணர்ந்ததை உன்னால் எப்படி உணர முடியும்?’’ உண்மைதானே! நம்மை நம்மால் மட்டுமே உணரமுடியும். நம்மை நாமே உணர்ந்தால்தான் நம் இலக்குகளை நிர்ணயிக்க முடியும்.
இலக்குகளை நிர்ணயித்தால்தான் அதை நோக்கிப் பயணம் செய்யப் பாதையைக் கண்டடைய முடியும். பாதையைக் கண்டடைந்தால் மட்டும் போதாது. அந்தப் பாதையில் பயணம் செய்வதற்கேற்ப நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளவும் வேண்டும். அதாவது, அப்டேட் செய்துகொள்ளுதல் மிக அவசியம்.
மீண்டும் மீனையே எடுத்துக்கொள்வோம். நாம் சிறிய தொட்டி ஒன்றில் வாழும் மீன். நம் இலக்கு, பெருங்கடலை அடைவது. சிறிய தொட்டியிலிருந்து விட்டு விடுதலையாகும் வழியைக் கண்டறிந்து, பிரமாண்டமான கடல் எனும் வெற்றியை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.
முடியுமா? முடியும். அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டால் நிச்சயம் முடியும். இங்கே மாற்றிக்கொள்ளுதல் என்பது நம் இலக்கு களின் தேவைக்கேற்ப அறிவை வளர்த்துக் கொள்வது. உலகின் வேகத்துக்கேற்ப, காலத்தின் அவசியத்திற்கேற்ப நம் திறனை மேம்படுத்திக்கொள்வது. சலிப்பில்லாமல் விடாமுயற்சியைத் தொடர்வது.
தொட்டி மீனாகிய நாம், துள்ளிக் குதித்து ஒரு சிறிய குட்டைக்குள் விழுகிறோம். அங்கிருந்து குதித்து ஓரளவு பெரிய குளத்தில் விழுகிறோம். அடுத்த கட்டம் நீரோட்டம். ஒரு சிறிய ஓடைக்குள் நீந்தத் தொடங்குகிறோம். சிறிய ஓடை பெரிய வாய்க்காலாக விரிகிறது. அதன் ஓட்டத்திலும் தாக்குப் பிடித்து, சலசலவென ஓடும் நதியை அடைகிறோம். நதியிலும் நாசூக்காகப் பயணித்து நம் லட்சியமான கடலை அடைகிறோம்.
அதுதான் வெற்றி.‘தொட்டியே உலகம்’ என்று முடங்கும் மீன், என்றைக்குமே கடலை அறியப் போவதில்லை. அடையப் போவதில்லை. ஆனால், கடலை இலக்காக நிர்ணயித்த மீன், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
சிறிய, ஓட்டமே இல்லாத நீர்ப்பரப்பில் வாழ்ந்து பழகிய அந்த மீன், பெரிய நீர்ப்பரப்புக்கேற்ப, நீரோட்டத்திற்கேற்ப தனது நீந்தும் திறனை வளர்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். சலிப்பின்றி நீந்திக்கொண்டேயிருக்க வேண்டும்.அப்போதுதான் தொட்டுவிடும் தூரத்தில் கடல் கிட்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்குகளைத் தயாரிப்பதற்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. மின்விளக்குகளின் மையத்தில் மெல்லிய மூங்கில் இழைகளை வைத்து சோதனை செய்தார். அவை நன்றாக எரிந்தன.
அந்த வகை மூங்கில்கள் தெற்காசிய நாடுகளில் கிடைப்பதாகக் கேள்விப்பட்டார். அவற்றைச் சேகரித்து வருவதற்காக ஜேம்ஸ் ரிகால்டன் என்ற புவியியல் ஆசிரியரை அனுப்ப முடிவு செய்தார். அவரது பயணம் ஆபத்து நிறைந்ததென்பதால் அவருக்கு 1500 டாலர் இன்சூரன்ஸ் தொகையாகக் கொடுப்பதற்கு எடிசன் சம்மதித்தார்.
மாதிரி மூங்கிலுடன் ஜேம்ஸ் தன் பயணத்தைத் தொடங்கினார். முதலில் இங்கிலாந்து, அங்கிருந்து சூயஸ் கால்வாய் வழியாக சிலோன் சென்றார். அங்கே அவருக்குச் சிலவகை அரிய ராட்சச மூங்கில்கள் கிடைத்தன.
பின் தென் இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு கல்கத்தா வந்தார். அங்கும் பலவகை மூங்கில்கள் கிடைத்தன. அங்கிருந்து ரங்கூன் சென்றார். அப்புறம் சீனா வழியாக ஜப்பான் சென்றார். அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பலவகை மூங்கில்களில், தேவையானவற்றை வாங்கி ஒரு கப்பலில் அனுப்பி வைத்தார்.
மீண்டும் 14 நாட்கள் பசிபிக் கடலில் பயணம் செய்து சரியாக ஒரு வருடம் கழித்து, புறப்பட்ட அதே இடத்துக்கு அதே மணியில் அதே நிமிடத்தில் வந்து சேர்ந்தார் ஜேம்ஸ்.மறுநாள் ஜேம்ஸ், தான் சேகரித்த பல அரிய வகை மூங்கில்களோடு எடிசனைப் பார்க்கச் சென்றார். வரவேற்பு பலமாக இருக்கும் என்று நினைத்த ஜேம்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘‘வாருங்கள், மூங்கில் கிடைத்ததா?’’ என்று ஒரு கேள்வியைச் சம்பிரதாயத்துக்குக் கேட்டார் எடிசன்.
‘‘பல அரிய வகை மூங்கில்களைக் கொண்டு வந்துள்ளேன். எது தேவைப்படும் என நீங்கள்தான் ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்’’ என்றார் ஜேம்ஸ்.சற்றே அவரைத் தலை தூக்கிப் பார்த்த எடிசன், ‘‘நீங்கள் இல்லாதபோது செயற்கை கார்பன் இழை ஒன்றைக் கண்டு பிடித்துவிட்டேன். மூங்கில்களைவிட அது மிகச் சிறப்பாகப் பயன்படுகிறது.
அதிகம் தாக்குப் பிடிக்கிறது. செலவும் குறைவு. அலுவலகத்தில் சொல்லியுள்ளேன். போய் உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ எனப் பதிலளித்துவிட்டு தன் வேலைகளில் மூழ்கினார் எடிசன்.மூங்கில் சேகரிப்பதற்கென்று மட்டுமே எடிசன் பல ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவு செய்திருந்தார். ‘ஜேம்ஸ் மூங்கில் கொண்டு வரட்டுமே’ என எடிசன் ஒரு வருடம் வீணாகக் காத்திருக்கவில்லை. ‘இல்லை, நமக்காக அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு மூங்கில் கொண்டு வந்திருக்கிறாரே அதைப் பயன்படுத்த வேண்டுமே’ என்றும் எண்ணவில்லை.
ஏழைகளுக்கும் பயன்படும் வகையில் மிகக் குறைந்த செலவில் மின் விளக்கைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது மட்டுமே எடிசனின் நோக்கமாக இருந்தது. அதை நோக்கி மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தார். மூங்கில் இழைகளைவிட அதிக திறனுள்ள, மலிவான செயற்கை கார்பன் இழைகளைத் தயாரிக்க முடிந்ததால் அதைப் பயன்படுத்திக்கொண்டார். செலவு செய்துவிட்டோமே என மூங்கிலைக் கட்டிக்கொண்டு அழவில்லை.
‘உலகுக்கு எது தேவையோ அதைக் கண்டுபிடி!’ என்பதே எடிசனின் தேடல் மொழி.உலகின் தேவைக்கேற்ப தன் அறிவை, தேடலை, கண்டுபிடிப்புகளை அப்டேட் செய்து கொண்டே இருந்தார் எடிசன். உலகின் நம்பர் 1 கண்டுபிடிப்பாளராக எடிசன் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இதுவே. ஆகவேதான் எடிசனின் கண்டுபிடிப்புகள் பலவும் நவீன கண்டுபிடிப்புகள் பலவற்றின் தாயாக விளங்குகின்றன.
நம்மால், ஆல்வா எடிசனாக முடியாது. ஆனால், அவரைப் போல உலகின் தேவையறிந்து நம் திறனை மேம்படுத்திக்கொண்டு ‘அப்டேட் எடிஷனாக’ முடியும். தொட்டி மீன், கடல் மீனாக மாறுவதற்கு அதுவே அவசியத் தேவை.‘தொட்டியே உலகம்’ என்று முடங்கும் மீன், என்றைக்குமே கடலை அறியப் போவதில்லை. அடையப் போவதில்லை. ஆனால், கடலை இலக்காக நிர்ணயித்த மீன், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
Six month training opportunities:NII
NIIல் குறுகிய காலப் பயிற்சிகள் :
M.Sc., M.Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதுடெல்லியிலுள்ள தேசியத் தடுப்பாற்றலியல் நிறுவனம் (National Institute of Immunology) முதுநிலைப் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களுக்கு அவர்களின் திட்டப்பணிகளுக்கு உதவும் 6 மாத காலக் குறுகிய பயிற்சியினை வழங்கிவருகிறது.
* பயிற்சிக் காலம்:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஜூன் மாதம் வரை முதல் அமர்வாகவும், ஜூலை - டிசம்பர் இரண்டாம் அமர்வாகவும் இரண்டு பயிற்சிக் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
* கல்வித்தகுதி:M.Sc., M.V.Sc., M.Tech போன்ற முதுநிலைப் பட்டங்களில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களும், ஒருங்கிணைந்த முதுநிலைப்பட்ட மாணவர்களும் (Integrated Master Students) விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை நடைபெற்ற முக்கியத் தேர்வுகளில் முதல் வகுப்பு தேர்ச்சி (அ) 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவர்கள் தங்களின் கல்வித் திறன், தேர்வு மதிப்பெண்கள், பயிற்சி பெற விரும்பும் காலம் போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கல்லூரியின் துறைத் தலைவர் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை academic@nii.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் Subject: எனுமிடத்தில் Six month Trainee application என்று குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பத்தின் அச்சு நகல்களை (Hard Copy) ‘Administrative Officer, Academic Cell, National Institute of Immunology, Aruna Asaf Ali Marg, New Delhi-110067’ எனும் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பித் தர வேண்டும். கல்லூரியின் துறைத்தலைவர்கள், தங்கள் துறைக்கு 2 மாணவர்களை மட்டுமே பரிந்துரைக்கலாம்.
* விண்ணப்பிக்கும் காலம்:ஜனவரி - ஜூன் முதல் அமர்வுக்கான பயிற்சிக்கு ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2016க்குள்ளும், ஜூலை - டிசம்பர் இரண்டாம் அமர்வுக்கு பிப்ரவரி 15 - மார்ச் 15, 2017க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். முதல் அமர்வுக்குத் தேர்வானவர்களுக்கு அக்டோபர் 31 தேதியிலும், இரண்டாம் அமர்வுக்குத் தேர்வானவர்களுக்கு ஏப்ரல் 30 தேதியன்றும் தகவல் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை நிறுவனத்தின் தேவையைப் பொறுத்தது. தங்குமிடத்திற்கான பொறுப்பு மாணவர்களைச் சார்ந்தது.
* கூடுதல் தகவல்கள்:பயிற்சி குறித்த மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள http://www.nii.res.in/academics/short-term-training இணையதளத்தைப் அணுகலாம்.
Subscribe to:
Posts (Atom)