NIIல் குறுகிய காலப் பயிற்சிகள் :
M.Sc., M.Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதுடெல்லியிலுள்ள தேசியத் தடுப்பாற்றலியல் நிறுவனம் (National Institute of Immunology) முதுநிலைப் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களுக்கு அவர்களின் திட்டப்பணிகளுக்கு உதவும் 6 மாத காலக் குறுகிய பயிற்சியினை வழங்கிவருகிறது.
* பயிற்சிக் காலம்:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஜூன் மாதம் வரை முதல் அமர்வாகவும், ஜூலை - டிசம்பர் இரண்டாம் அமர்வாகவும் இரண்டு பயிற்சிக் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
* கல்வித்தகுதி:M.Sc., M.V.Sc., M.Tech போன்ற முதுநிலைப் பட்டங்களில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களும், ஒருங்கிணைந்த முதுநிலைப்பட்ட மாணவர்களும் (Integrated Master Students) விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை நடைபெற்ற முக்கியத் தேர்வுகளில் முதல் வகுப்பு தேர்ச்சி (அ) 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவர்கள் தங்களின் கல்வித் திறன், தேர்வு மதிப்பெண்கள், பயிற்சி பெற விரும்பும் காலம் போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கல்லூரியின் துறைத் தலைவர் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை academic@nii.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் Subject: எனுமிடத்தில் Six month Trainee application என்று குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பத்தின் அச்சு நகல்களை (Hard Copy) ‘Administrative Officer, Academic Cell, National Institute of Immunology, Aruna Asaf Ali Marg, New Delhi-110067’ எனும் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பித் தர வேண்டும். கல்லூரியின் துறைத்தலைவர்கள், தங்கள் துறைக்கு 2 மாணவர்களை மட்டுமே பரிந்துரைக்கலாம்.
* விண்ணப்பிக்கும் காலம்:ஜனவரி - ஜூன் முதல் அமர்வுக்கான பயிற்சிக்கு ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2016க்குள்ளும், ஜூலை - டிசம்பர் இரண்டாம் அமர்வுக்கு பிப்ரவரி 15 - மார்ச் 15, 2017க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். முதல் அமர்வுக்குத் தேர்வானவர்களுக்கு அக்டோபர் 31 தேதியிலும், இரண்டாம் அமர்வுக்குத் தேர்வானவர்களுக்கு ஏப்ரல் 30 தேதியன்றும் தகவல் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை நிறுவனத்தின் தேவையைப் பொறுத்தது. தங்குமிடத்திற்கான பொறுப்பு மாணவர்களைச் சார்ந்தது.
* கூடுதல் தகவல்கள்:பயிற்சி குறித்த மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள http://www.nii.res.in/academics/short-term-training இணையதளத்தைப் அணுகலாம்.
No comments:
Post a Comment