இதேபோல், வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வழங்கும் சீட்டுகள் அடிப்படையில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீரிழிவு நோய், கார்டியாலஜி ஆகிய பிரிவுகளை தவிர அனைத்து மருத்துவ பிரிவுகளும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இதனால், மருந்துகள் வழங்குவது எளிதாகும் விரைவாக மருந்துகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆன்லைன் மயமாக்கப்பட்ட பிரிவுகளுக்கு தேவையான கம்ப்யூட்டர்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், 25 மருத்துவ பிரிவுகளுக்கு ஒரே ஒரு கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 25 பார்மசிஸ்ட்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் பல ஆண்டுகளாக 5க்கும் மேற்பட்ட பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 1,100 பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆன்லைன் வசதிக்கேற்ப ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி வரிசைகளில் மருந்து வழங்கும் வகையில் கணினிகள் பொருத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Tuesday, 9 August 2016
Demand filling up of 1100 Pharmacists vacancies in TN Govt hospitals

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment